இயல்புநிலை தேடல் வழங்குநரை இயக்கு

இயல்புநிலைச் சேவை வழங்குநரைப் பயன்படுத்துவதை இயக்கும்.

இந்த அமைப்பை நீங்கள் இயக்கினால், URL அல்லாத உரையைச் சர்வபுலத்தில் பயனர் தட்டச்சு செய்யும் போது இயல்புநிலைத் தேடல் செயல்படுத்தப்படும்.

பிற இயல்புநிலைத் தேடல் கொள்கைகளை அமைத்து, பயன்படுத்தப்பட வேண்டிய இயல்புநிலைத் தேடல் வழங்குநரை நீங்கள் குறிப்பிடலாம். இவை காலியாக விடப்பட்டால், இயல்புநிலை வழங்குநரைப் பயனரால் தேர்வுசெய்ய முடியும்.

இந்த அமைப்பை முடக்கினால், URL அல்லாத உரையைச் சர்வபுலத்தில் பயனர் உள்ளிடும் போது தேடல் எதுவும் செயல்படுத்தப்படாது.

இந்த அமைப்பை நீங்கள் இயக்கினாலோ முடக்கினாலோ, Google Chrome இல் பயனர்களால் இந்த அமைப்பை மாற்றவோ மேலெழுதவோ முடியாது.

இந்தக் கொள்கை அமைக்கப்படாமல் விடப்பட்டால், இயல்புநிலைச் சேவை வழங்குநர் இயக்கப்படும், மேலும் பயனரால் தேடல் வழங்குநர் பட்டியலை அமைக்க முடியும்.

Active Directory களத்துடன் சேர்க்கப்படாத Windows நிகழ்வுகளில் இந்தக் கொள்கை இருக்காது.

Supported on: Microsoft Windows XP SP2 அல்லது அதற்கு பிந்தைய பதிப்பு
Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome
Value NameDefaultSearchProviderEnabled
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)